வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து, ராப்பத்து என்றால் என்ன?
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்கள் பகல் பத்து ஆகும் (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை).
வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாக கொண்டாடப்படுகிறது
எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது.
எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.
அரங்கனை தரிசிப்போம்.. அவனருளைப் பெறுவோம்!