போகி பண்டிகை கொண்டாடுவது ஏன்?

பொங்கல் திருநாளின் முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதுநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது.

வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்க வேண்டும்

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...