பொங்கல் பூஜை செய்வது எப்படி?

பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும்.

வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள்.

இலையில் பச்சரிசி, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும்.

ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள்.

சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம்.

தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். குலவையிடத் தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என்று முழங்கலாம்.

சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள் சொல்லி வழிபட்டு வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம்.

கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...