ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஏன்?

மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம்.

உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள்.

நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு.

ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும்.

சித்தாந்தம் கூறும் இவ்வளவும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...