ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பித்து சொல்லப்படுவது ஏன்?

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார்

ஆத்மபலம், செயல் வெற்றி பெற சூரியனை வணங்கும்படி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

சூரிய நமஸ்காரம் செய்ய ஆரோக்கியம் உண்டாகும் என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.

சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் ஆவணி ஞாயிறு விரதம் இருப்பர்

இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர்

ஆண்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் விரதம் மேற்கொள்வர்.

கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து பிரார்த்திக்க நல்லதே நடக்கும்!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...