ஆன்மீக பயணத்துக்கான ஆசியாவின் சில அழகிய கோவில்கள்
கம்போடியாவின் பழங்கால நகரமான அங்கோரிலுள்ள அங்கோர் வாட், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும், மிகப்பெரிய மத நினைவுச்சின்னமாகவும் உள்ளது.
மியான்மரின் யாங்கோனிலுள்ள ஷ்வேடகன் பகோடா கோவில், மின்னும் தங்க ஸ்தூபியாகும்; வைரங்கள், மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இப்புனித தலம்.
இந்தியாவில், மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவில், திராவிட கட்டடக்கலையின் அழகிய படைப்பாகும். சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கோபுரங்கள் கண்களுக்கு விருந்தாகும்.
பூடானில் இமயமலை குன்றின் விளிம்பில் அமைந்துள்ள டைகர்ஸ் நெஸ்ட் மடாலயம், ஆன்மீகத்தின் அடையாளம் மட்டுமின்றி, அமைதியை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய இடமாகும்.
இந்தோனேசியாவின், போரோபுதூர் உலகின் மிகப்பெரிய புத்த கோவிலாகும். 504 புத்தர் சிலைகள் உள்ளநிலையில், இங்கு சூரிய உதயம் அனைவரையும் ஈர்க்கும் மாய அனுபவமாகும்.
இந்தியாவின் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயில் சீக்கிய மதத்தின் புனித தலமாகும். இது ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக உள்ளது.
ஜப்பானின், நாராவில் அமைந்துள்ள தோடை-ஜியில், உலகின் பெரிய வெண்கல புத்தர் சிலைகளில் ஒன்றான பெரிய புத்தர் மண்டபம் அமைதியான அழகிய சூழ்நிலையை அளிக்கிறது.