மயிலையே கயிலை, கயிலையே மயிலை; தினமும் விழா கோலம்!

'மயிலையே கயிலை, கயிலையே மயிலை' எனும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் கோவில்.

பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது; சம்பந்தரால் பூம்பாவையை உயிர்ப்பித்தது இந்த மயிலையில் தான்.

கபாலீஸ்வரருக்கு ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

முதல் நாள் கிராம தேவதை பூஜையுடன் துவங்கி, தினமும் சுவாமி உலா நடக்கும்

மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்திக் காட்சி சிறப்பு வாய்ந்தது.

விழாவின் ஏழாம் நாளான (29ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. வில், அம்பு அலங்காரத்துடன் கபாலீஸ்வரர் அருள்பாலிப்பார்

பெருவிழாவின் எட்டாம் நாள் (30 ம் தேதி) மாலை அறுபத்து மூவர் புறப்பாடு நடக்கும். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்

விழாவின் பத்தாம் நாள் காலை, கபாலீஸ்வரர் தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடைபெறும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...