ஆன்மிக அதிசயங்கள் நிறைந்த அற்புத ஆலயங்கள்..!
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆன்மீகமும், அறிவியலும் கைகோர்த்த பல அதிசய ஆலயங்கள் உள்ளன.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் (புதுச்சேரி): சனிக்கோளின் கதிர்வீச்சு இங்கே நேரடியாகவும் அதிகமாகவும் விழுவதாக கூறுகின்றனர்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - இசைத் தூண்கள்: இங்குள்ள கல்லால் ஆன தூண்களைத் தட்டினால் 'சரிகமபதநி' என்ற சப்தஸ்வரங்கள் அப்படியே ஒலிக்கின்றன. இது ஒரு பொறியியல் அதிசயமாகவே உள்ளது.
லேபாக்ஷி வீரபத்திரர் கோவில் (ஆந்திரா) - தொங்கும் தூண்: இந்தக் கோவிலில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அதில் ஒரு தூண் மட்டும் தரையில் படாமல் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் (கும்பகோணம்): இங்குள்ள படிக்கட்டுகளை மிதித்தால் அவை இசையை எழுப்புகின்றன. இவை 'இசைப் படிகள்' என்று அழைக்கப்படுகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோவில் - ரகசியம்: இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடம் உலகின் காந்த மையப்புள்ளிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குள்ள 'சிதம்பர ரகசியம்' என்பது ஆகாயத்தைக் குறிக்கிறது.
பூரி ஜெகநாதர் கோவில் (ஒடிசா): இந்த ஆலயத்தின் உச்சியில் இருக்கும் கொடி, காற்றின் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். இந்தக் கோவிலின் கோபுர நிழல் தரையில் விழுவதே இல்லை. இது ஒரு மிகப்பெரிய கட்டிடக்கலை அதிசயமாகும்.