இனிய வாழ்வு தரும் மூன்றெழுத்து மந்திர சொல்!

தமிழில் உள்ள மெய் எழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும்.

மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு.

'முருகா' என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறு பொருள் உண்டு.

முருகன், குமரன், குகன், ஆகிய மூன்று பெயர்கள் சிறப்பு மிக்கவை.

அருணகிரிநாதர், ''முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்'' என கந்தரநுபூதியில் பாடியுள்ளார்.

'முருகா' என்ற பெயரை நினைத்தாலும், மனம் உருகிச் சொன்னாலும் இனிய வாழ்வு அமையும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...