ஆனி உத்திரத்தில் நடராஜர் தரிசனம் ஏன்?

மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர்.

சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத் திருமஞ்சனம்.

இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள்.

ஆனி உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்நாளில் சிவனையும், நடராஜரையும் தரிசித்து செல்வ வளம் மற்றும் ஆரோக்கியம் பெறுவோம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...