ஆடி வழிபாட்டின் சிறப்பு என்ன?

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது.

பூமாதேவி அவதரித்த ஆனந்தமான மாதம் ஆடி..!

ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும்.

வளையல்களை பிரசாதமாக பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி வாழ்வர்.

ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் இணையும் நாள் மிகவும் சக்தி கொண்டது. இந்த நாளில் தான் ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்தாள்.

ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நிதியில் நெய், எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் விலகும்.

ஆடியில் அம்மனை வழிபட்டு சந்தோஷமான வாழ்வு பெறுவோம்..!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...