மறக்ககூடாத மகாளய பட்சம்; தலைமுறைக்கே புண்ணியம் கிடைக்கும்!

புரட்டாசி தேய்பிறை பிரதமை தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் முன்னோர்கள் எமதர்மனின் அனுமதியுடன் நம்மைக் காண பூலோகத்திற்கு வருகின்றனர்

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும்.

இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்தால் முன்வினை பாவம் தீரும். முன்னோர் ஆசியால் செல்வம் பெருகும்.

மகாளய பட்சம் என்னும் அரிய வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தினால் நம் தலைமுறைக்கே புண்ணியம் கிடைக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...