நவராத்திரியில் எப்படி வழிபட வேண்டும்? தினமும் செய்ய வேண்டிய அம்மன் அலங்காரமும்.. பூஜை முறையும்!
நவராத்திரி நாட்களில் தினமும் அம்பிகை ஒரு கோலத்தில் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த விரதமிருக்கும் பெண்கள் வழிபடும் விதம், படைக்க வேண்டிய நைவேத்யம், வழிபாட்டின் பலன்களைத் தெரிந்து கொள்வோம்
முதல் நாள்: அம்பிகை: மகேஸ்வரி - அசுரர்களான மது, கைடபர்களை வதம் செய்தவள்கோலம்: அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக் கோலம்நைவேத்யம்: வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்,மொச்சை, பருப்பு வடைவழிபாட்டின் பலன்: செல்வம் பெருகும், ஆயுள் அதிகரிக்கும்.
இரண்டாம் நாள்அம்பிகை: ராஜராஜேஸ்வரி - மகிஷாசுரனை வதம் செய்பவள்பூஜை: 3 வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து வழிபடுதல்கோலம்: கோதுமை மாக்கோலம்நைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரைவழிபாட்டின் பலன்: நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்.
மூன்றாம் நாள்அம்பிகை: வராகி - பன்றி முகம் கொண்டவள்கோலம்: மலர்க்கோலம்பூக்கள்: செண்பகம், குங்கும அர்ச்சனைநைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்வழிபாட்டின் பலன்: குறையில்லாத வாழ்வு
நான்காம் நாள்அம்பிகை: மகாலட்சுமி - சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்கோலம்: அட்சதை கோலம்நைவேத்யம்: அவல் கேசரி, பால் பாயசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்வழிபாட்டின் பலன்: கடன் தொல்லை தீரும்
ஐந்தாம் நாள்அம்பிகை: மோகினி - சும்ப, நிசும்பர்களை வதம் செய்தவள்கோலம்:கடலைமாவு கோலம்நைவேத்யம்: பால்சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்வழிபாட்டின் பலன்: விருப்பம் நிறைவேறும்
ஆறாம் நாள்அம்பிகை: சண்டிகா தேவி - சர்ப்ப ஆசனத்தில் வீற்றிருப்பவள்கோலம்: கடலை மாவு கோலம்நைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல், வழிபாட்டின் பலன்: கவலை தீரும், வழக்கில் வெற்றி கிடைக்கும்
ஏழாம் நாள்அம்பிகை: சாம்பவி துர்க்கை - பொற்பீடத்தில் அமர்ந்திருப்பவள்கோலம்: மலர்க்கோலம்நைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டுவழிபாட்டின் பலன்: விரும்பிய வரம் கிடைக்கும்
எட்டாம் நாள்அம்பிகை: நரசிம்ம தாரிணி - ரக்த பீஜனை வதம் செய்தவள்கோலம்: தாமரை மலர்க்கோலம்நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சைவழிபாட்டின் பலன்: நல்லெண்ணம் உண்டாகும்
ஒன்பதாம் நாள்அம்பிகை: பரமேஸ்வரி - திரிசூலத்துடன் இருப்பவள்கோலம்: வாசனைப் பொடிக்கோலம்நைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் பாயாசம், கேசரி, எள்உருண்டைவழிபாட்டின் பலன்: சந்ததியினர் நல்வாழ்வு பெறுதல்
பத்தாம் நாள்அம்பிகை: விஜயா - பார்வதியின் ஸ்துால வடிவம் நைவேத்யம்: பால் பாயாசம், இனிப்பு வகைகள், சித்ரான்னம்இந்நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சந்தனம், தாம்பூலம், பூக்கள், பழவகைகள், ரவிக்கைத்துணி இவற்றைத் தானமாகக் கொடுத்தால் தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும்.