ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்த புண்ணியம் இந்த ஒரு நாள் காவிரியில் குளித்தாலே கிடைத்துவிடும்!
ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும்.
இந்தியாவில் கங்கை உள்பட 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது
துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும், விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும்.
பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலமாதலால் மாயூரம் என்று வடமொழியிலும், மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.
காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.
ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.