தினமும் ஒரு சாஸ்தா- 2; வாள் ஏந்திய சாஸ்தா



தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது.

கடலுார் மாவட்டத்திலுள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகுமுத்து அய்யனார் (சாஸ்தா) வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் தாங்கியபடி கம்பீரமாக காட்சி தருகிறார். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை சீட்டில் எழுதி சுவாமியின் கையிலுள்ள வாளில் கட்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் உருவ பொம்மைகளை பெரியளவில் செய்து இங்கு நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இங்குள்ள அய்யனாரின் குதிரை வாகனம் பழமையானது. இதை உருவாக்கிய அழகுச்சித்தருக்கு திங்கட்கிழமையில் விசேஷ பூஜை நடக்கிறது. சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமையன்று இக்கோயிலில் திருவிழா விமரிசையாக நடக்கும்.

 புதுச்சேரியில் உள்ள ஏம்பலத்தில் இருந்து 1 கி மீ.,
நேரம்: காலை 8:00 – 10:00 மாலை 5:00 – 7:00 மணி  
தொடர்புக்கு: 95857 46271, 70943 10448

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்