புல்மேட்டில் இருந்து 6340 பக்தர்கள் மகர விளக்கு தரிசனம்

ஜனவரி 16,2024



மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரவிளக்கை 6340 ஐய்யப்ப பக்தர்கள் தரிசித்தனர்.

இந்த முறை புல்மேட்டில் இருந்து காட்டு வழியில் சபரிமலை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் புல்மேட்டில் இருந்து நேற்று 6340 பக்தர்கள் மகரவிளக்கை தரிசித்தனர். அதற்கு தமிழகம் உள்பட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் சத்திரம் வழியாக 2822, கோழிக்கானம் வழியாக 1289, சபரிமலையில் இருந்து 3870 பேர் புல்மேடு வந்தனர். அதில் 1641 பக்தர்கள் மகர விளக்கை தரிசிக்காமல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். புல்மேட்டில் மகர விளக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போலீஸ், சுகாதாரம், வருவாய், உணவு பாதுகாப்பு, பொது வினியோகம், தீயணைப்பு, குடிநீர் வாரியம், வனம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ், மண்டல டி.ஐ.ஜி. புட்டா விமலாதித்யா, எஸ்.பி. விஷ்ணு பிரதீப், சப் கலெக்டர் அருண் எஸ்.நாயர் உள்பட உயர் அதிகாரிகள் பலர் நேற்று புல்மேட்டில் முகாமிட்டு பணிகளை பார்வையிட்டனர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்