திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் குருபூஜை விழா



மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் மகரத்தலை நாள் குருபூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.



நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் அசுவதி குருபூஜை விழா தொடக்க நிகழ்ச்சியாக திருமாளிகை த்தேவர் உற்சவம் நடந்தது. நேற்று 23ம் தேதி காலை குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சன்னதி எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அன்னக் கொடி ஏற்றி குருபூஜை விழா சிறப்பு மகா தீபாரதனையுடன் தொடங்கியது. இதில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாலை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி 2018 -19ம் ஆண்டில் தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், காரைக்குடி, சிதம்பரம், கீழ்வேளூர், உளுந்தூர்பேட்டை, கம்பம் மைய மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் வழங்கினார். தொடர்ந்து நடந்த சமய விரிவுரை நிகழ்ச்சியில் மகாலிங்கம் ஓதுவார் திருமுறை பாடினார். அம்பலவாணர் தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். சென்னை மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார், பி.எச்.எஸ் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் சிவாகமங்களில் முப்பொருள் இலக்கணம் எனும் தலைப்பிலும், ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய பேராசிரியர் ஜெயபால் மணியாடு பாவாய் காவாய் எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி உதவி த லைமை ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

இரவு நடைபெற்ற பூஜை நிறைவில் திருக்கோகர்ணம் இந்துசமய வார வழிபாட்டு மன்றத்தின் சைவத் தமிழ்ப் பணிகளை பாராட்டி அதன் பொறுப்பாளர் வெங்கடேசனுக்கு பொ ற்கிழி ரூ.5ஆயிரம் மற்றும் சைவசுடர் நிலையம் எனும் விருதினை குருமகாசன்னிதானம் வழங்கினார். இரவு அம்பலவாணர் அரங்கில் திருக்கடையூர் நிருத்யாலயா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சைவ சித்தாந்த பேராசிரியர்கள், மாணவர்கள், ஆதீன புலவர்கள், தமிழாசிரியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்