காஞ்சிபுரம்: ராமேஸ்வரம் சங்கர மடத்தில் வழிபாடு செய்வதற்காக, சுவாமிமலையில் தயார் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு நேற்று எடுத்து வரப்பட்ட, ஐம்பொன்னால் செய்யப்பட்ட மஹா சுவாமிகள் உருவ சிலைக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
ராமேஸ்வரம் சங்கரமடத்தில் வழிபாடு செய்வதற்காக, ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் அனுஷம் நட்சத்திர வழிபாட்டு குழு மூலம், சுவாமிமலையில், ஒன்னே முக்கால் அடி உயரம், முக்கால் அடி உயரத்தில் ஐம்பொன்னால் மஹா சுவாமிகள் உருவ சிலை செய்யப்பட்டது. இச்சிலையை குழு தலைவர் ஜி.வி.சுவாமிநாதன் தலைமையிலான வழிபாட்டு குழுவினர் நேற்று காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சமர்ப்பித்தனர். அதை தொடர்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மஹா சுவாமிகளின் ஐம்பொன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து அனுஷம் நட்சத்திர வழிபாட்டு குழுவினர் மஹா சுவாமிகளின் சிலையை ராமேஸ்வரத்திற்கு எடுத்து சென்றனர்.