தேய்பிறை அஷ்டமி கோயில்களில் வழிபாடு



நத்தம்: குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில் கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் காலபைரவர் சன்னதியிலும் சிறப்பு அலங்காரம் செய்ய தீபாராதனைகள் நடந்தது.


ரெட்டியார்சத்திரம்: கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்ய அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்