தைப்பூச விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை



திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் திருவிளக்கு பூஜை நடந்தது.


இக்கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தைப்பூச விழா நடத்துகின்றனர். டிச.25 ல் சஷ்டியன்று மூலவருக்கு அபிேஷகம் நடந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்து விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை முருக பக்தர்களின் பிரார்த்தனை நடைபெறுகிறது. டிச.31ல் கார்த்திகை சிறப்பு அபிஷேகம், ஜன.8 ல் சஷ்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.


மார்கழி கடைசி வெள்ளியன்று சிவகாமி அம்மன் சன்னதியில் பெண்கள் குத்துவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. ஜன.13ல் 108 சங்காபிேஷகமும், ஜன.18ல் முருகப்பெருமானுக்கும்,வெள்ளி வேலுக்கும் சிறப்பு அபிேஷகம்,அன்னதானமும், ஜன.24ல் சஷ்டி சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். ஜன.26ல் பழநிக்கு பக்தர்கள் யாத்திரை துவங்குகின்றனர். ஜன.27 ல் கார்த்திகை பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகமும், பிப்.1ல் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்