தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டு முந்தைய அம்மன் சிற்பம்: வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு



தாடிக்கொம்பு; தாடிக்கொம்பு உண்டார்பட்டி நாச்சியார் குளக்கரையில் ஊரை காக்கக்கூடிய 500 ஆண்டு பழமை வாய்ந்த பிடாரியம்மன் சிற்பம் உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.


திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு ஆய்வாளர் ந.தி. விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் ,வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி கூறியதாவது:தாடிக்கொம்பு உண்டார்பட்டி நாச்சியார் குளக்கரையில் பழமை வாய்ந்த ஊரைக் காக்கும் பிடாரியம்மன் சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் ஒழுங்கற்ற கல்லில் செதுக்கப்பட்டது. தலையில் நெருப்பு சுடர் பறக்கும் அக்கினி கிரீடம், உருட்டு விழிகளுடன் கோபப்பார்வை , கோரை பல் , காதுகளில் வட்ட குண்டல், சடச கலையான கரங்கள் ஆறும், இடது கை முன் நீட்டி உள்ளது. அதில் உடுக்கையும் பின்புற கீழ் கையில் தரையில் ஊன்றிய வாளும், தோலின் மேல் உள்ள கைகளில் அக்னி சுடரும், வலது தோள் கையில் வெட்டுப்பட்ட மனித தலையும், கீழ் நடு கையில் மேல்நோக்கிய சூலம், கீழ் கையில் அம்பு , தோள்களில் தோள் வளையம், முழங்கையில் கடக வளையல்கள் , கை மணிக்கட்டுகளில் சங்கு வளையங்களும் உள்ளன.


உத்குடியாசனத்தில் வலது கால் பீடத்திலும், இடது கால் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்த நிலையில் இடையில் இடுப்பு பட்டியை சுற்றி விரி தொங்கு மேகலையும், கால்களில் தண்டமும் கொண்டு கோபப்பார்வையுடன் அமர்ந்திருக் கிறாள். போர் வீரர்கள் போருக்கு செல்லும்போது துர்க்கை, தவ்வை, பிடாரி எனும் போர் கடவுள்களை வணங்கி செல்வர். இச்சிலை இருக்கும் கிழக்குப் பகுதி ஊர்கள், பாண்டியர் கால‌ படை வீடுகளான சீலப்பாடி, படியூர், முள்ளிப்பாடி, தாமரைப்பாடி என பல படை வீடுகள் இருந்துள்ளது. மேலும் ஊர்களின் காவல் தெய்வமாக பிடாரியம்மன் இருந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிகளை ஆய்வு செய்யும்போது சிற்பம் மண்ணில் புதைந்து இருந்தது. தற்போது இப்பகுதி மக்கள் சிற்பத்தை எடுத்து வழிபட்டு வருகின்றனர் என்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்