பாரம்பரிய பாதையில் பழநி பாதயாத்திரை: கண்மாய் கரைகளில் நடந்த பக்தர்கள்



திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பழநி பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாரம்பரிய பாதையான வயல் வரப்பு, கண்மாய் கரைகளில் நடந்து சென்றனர்.


சிவகங்கை மாவட்டத்தின் ஆன்மீக பாரம்பரியங்களில் பழநி பாதயாத்திரையும் ஒன்று. சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக முருக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கார்த்திகை 1 ல் விரதம் துவங்கி, தைப்பூசத்தன்று பழநி சென்று முருகனை வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் முதல் திருப்புத்தூர் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரோடுகளில் குடும்பம், குடும்பமாக பழநி நோக்கி நடந்து சென்றனர். வழியெங்கும் பக்தர்களை உறவினர்கள், பொதுமக்கள் உணவு,குடிநீர்,இளநீர் வழங்கி உபசரித்து ஆசி பெற்றனர்.


நேற்று மாலை வரை பக்தர்கள் திருப்புத்தூரை கடந்து சென்றனர். லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வதால் சிவகங்கை மாவட்ட கிராமங்கள் ‛ வெறிச்’ ஆகி விட்டன. இதில் ரோடுகளில் மட்டுமின்றி பாரம்பரிய பாதையில் யாத்திரை செல்வதை நகரத்தார் பாரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர்.பாரம்பரிய பாதையாக தேவகோட்டை,காரைக்குடி பகுதியிலிருந்து புறப்பட்டு குன்றக்குடி வந்து அங்கிருந்து வைரவன்பட்டி, கண்டவராயன்பட்டி,மருதிப்பட்டி,சிங்கம்புணரி,மணப்பச்சேரி,சமுத்திராப்பட்டி, நத்தம்,உப்பார்,இடைச்சிமடம்,திண்டுக்கல்,ரெட்டியாரபட்டி,செம்மடைப்பட்டி,குழந்தைவேலன் சன்னதி,சத்திரப்பட்டி, ஆயக்குடி,இடும்பன்குளம்,பழநி செல்கின்றனர். இவர்கள் ரோட்டில் மட்டும் செல்லாமல் பாரம்பரியமான பாதையாக கிராமங்களுக்கு குறுக்கே வயல் வரப்பு, கண்மாய் கரை, ஆற்றங்கரை வழியாகவும் நடந்து செல்கின்றனர். திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டியிலிருந்து வயல் வரப்பு,கண்மாய்கரை வழியாக சிறுகூடல்பட்டி வழியாக கண்டவராயன்ப்டடிக்கு சென்றனர். அதில் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் சென்றனர். நகரத்தார் மட்டுமி்ன்றி பலரும் அவர்களைப் பின்பற்றி பாரம்பரிய பாதையில் யாத்திரை சென்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்