காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான அலங்காரம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் சனிஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வெகுவிமர்ச்சியாகநடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நாளை 6ம் தேதி காலை 8.24 மணிக்கு ஸ்ரீசனீஸ்வரபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெயர்கிறார்.இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஓசூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது சொந்த செலவில் சுமார் 6டன் பலவகையான மலர்கள், காய்கள்,பழவகைகளை கொண்டு தர்பாரண்யேஸ்வர்,சனிஸ்வரபகவான்,அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதியில் மலர்கள் மூலம் அலங்கார செய்யப்பட்டுள்ளது.இதனால் சுமார் 150க்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டு கடந்த 5ஆண்டுகளாக அலங்கார செய்யப்படுகிறது.மேலும் இதுக்குறித்து ஒசூர் ரமேஷ் கூறுகையில், திருநள்ளார். சபரிமலை. குருவாயூர். மாதேஸ்வர மலை உள்ளிட்ட முக்கிய கோவிலில்களில் முக்கிய விழா காலங்களில் வண்ணமலர்கள் கொண்டு அலங்கார செய்யப்படுவதாக ஒசூர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கவரும் வகையில் பலவகையான மலர்கொண்டு அலங்காரம் செய்யும் பணிகளை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டுக்களித்தனர்.