வாடிப்பட்டி: தனிச்சியம் பகவதி அம்மன் கோயில் பங்குனி 34ம் ஆண்டு பங்குனி உற்ஸவ விழா மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை நடந்தன. மார்ச் 28ல் சுற்றுப்புற தெய்வங்கள் வழிபாடு, 29, 30ல் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 31ல் பூக்குழி இறங்கினர். ஏப்.,1ல் திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சாஸ்தா அய்யனார் கோயிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர். முளைப்பாரி அலங்காரம் மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று பக்தர்கள் கோயிலை சுற்றி அங்கபிரதட்சணம், துலாபாரம், கரும்புத் தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை முளைப்பாரி ஊர்வலம், ஜெய பாண்டிய விநாயகர் கோயிலில் அம்மன் ஊஞ்சல் ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஏப்.,3) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், கொடி இறக்கம் பூஞ்சோலை செல்லுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.