திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்



திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் நேற்று காலை 8.30மணி யளவில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம் நாதஸ்வர இன்னிசை முழங்க நடந்தது.  ஐயாறப்பர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி படிச்சட்டத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஐயாறப்பர், அறம் வளர்த் தநாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மாலை பிரச்சார மண்டபத்தில் அஞ்செழுத்தெ ஆகமம் என்ற தலைப்பில் ஐயாறப்பர் கோயில்  கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான்சுவாமி கள் சொற்பொழிவும். கலியமூர்த்தி சகோதாரர்களின் மங்கள இசை கச்சேரியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சித்திரை பெருவிழா வில் வரும் வரும் 25 ம் தேதி காலை பல்லக்கு மாலை 5.00 மணிக்கு தன்னைத்தான் பூஜித்தல் இரவு  9.00 மணிக்கு ஆறூர் சுவாமிகள் வருகை இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சந்நிதி முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜையும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வெள்ளி வாகனத்தில் எழுந்தருள சதுர்முகச்சப்பர வீதியுலா நடைபெறுகிறது. 29  ம்தேதி காலை 9.00 மணிக்கு மேல்  பஞ்சரததேரோட்டமும், மே 2 ம் தேதி சப்தஸ் தான விழாவில் காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியு டன் விசித்திர கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் வலம் வருதல் நிகழ்ச்சியும், 3  ம்தேதி தில்லைஸ்தானம் உள்ளிட்ட 7 ஊர் பல்லக்குகள்  திருவையாறு வீதிகள் வலம் வந்து பொம்மை பூப்போடுதல் நிகழ்ச்சியும் பின்னர் 6 ஊர் பல்லக்குகளும் தீபா ராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இதற்கான ஏற்பாடு களை தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வழிகாட்டுதலின்படி ஐய்யாறப்பர் கோயில் கட்டளைவிசாரணைஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள்,  மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்