சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா துவக்கம்



மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திருமுலைப்பால் விழா நடக்கிறது.


மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இந்த கோவிலில்   அஷ்ட பைரவர்கள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு சிவபெருமான் பிரமபுரீசுவரர்,  தோணியப்பர், சட்டைநாதர் என 3 நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில்  பசியால் அழுத ஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால்  ஊட்டியதைத் தொடர்ந்து ஞானம் பெற்ற திருஞான சம்பந்தர்  மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவார பதிகத்தை பாடினார்  அதை நினைவு கூறும் வகையில்  ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தில் மறுநாள்  திருமுலைப்பால் விழா நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு சித்திரை பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வினாயகர், சுப்பிரமணியர், முத்துச்சட்டைநாதர், திருநிலை நாயகி அம் பாள் உடனாகிய பிரமபுரீசுவரர் பல்லக்கில் வந்து மண்டபத்தில் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட ரிஷபக்கொடி, ஓதுவார்கள் தேவாரம் பதிகம் பாடிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில்  நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்  தொடர்ந்து நாளை மதியம் 12 மணிக்கு பிரசித்தி பெற்ற திருமுலைப்பால் விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை  கோவில்  சூப்பரண்ட் செந்தில் தலைமையிலானோர் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்