திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது.