எழுமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்



எழுமலை: எழுமலை அருகே மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் காசிமாயன், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயச்சந்திரன், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் யுவராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்