சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், தினமும் லட்சுமி நாராயணருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று சுவாமி பச்சைப்பட்டு உடுத்தி வெள்ளி குதிரை வாகனத்தில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்கினார். சிறப்பு பூஜைகளுடன், எதிர்சேவை நடந்தது.
மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, 2 வாரங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப். 28ல் நடந்தது. நேற்று, சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கினார். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.