மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி இலட்சார்ச்சனை



சென்னை: மாங்காட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மற்றும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஏகதின இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்ரா பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டும் ஒன்றாக வந்ததால் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனம் செய்ய அலை மோதியது. வேத மந்திரங்கள் முழங்க அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பாள் முன்பு குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்