மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் திருவிழா பத்திரிகையை வைத்து சுவாமி கும்பிட்டனர். தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் திருவிழா பத்திரிகை (சலாங்கம்) வாசிக்கப் பட்டது. மே 25 ல் திருவாதவூரில் இருந்து திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மேலுாருக்கு எழுந்தருள்வர். மே 28ல் திருக்கல்யாணமும், மே 29ல் தேரோட்டமும் நடை பெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.
சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையில் நடந்த சித்ரா பவுர்ணமி வலை வீசும் படலத்தில் (பொம்மை) சுறா மீன் கரைக்கு கொண்டு வரப்பட்டது.சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையில் நடந்த சித்ரா பவுர்ணமி வலை வீசும் படலத்தில் (பொம்மை) சுறா மீன் கரைக்கு கொண்டு வரப்பட்டது.