அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி யாக விழா



அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி யாக விழா நடைபெற்றது.

கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று குரு பெயர்ச்சி யாக விழா நடைபெற்றது.  வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று காலை 11 மணிக்கு மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானார். இதற்காக பரிகார ஹோமம்,நவகிரக ஹோமம்,மந்திர பாராயணங்கள் ஆகியவை கோவில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்னர் குருபகவானுக்கு பால், தயிர்,இளநீர், பஞ்சாமிர்தம், தேன்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் குருபகவான் கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்