புட்டபர்த்தி ; இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னதியில் வழிபாடு நடத்தினார்.
வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்திக்கு வருகை தந்தார். ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஆன்மீகத் தலமான வருகை தந்தார்.
மேற்கு ஆசிய நெருக்கடியால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் கொள்முதலைப் பல்வகைப்படுத்த இந்தியா முயன்று வரும் நிலையில், எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ரோட்ரிக்ஸ் புதன்கிழமையன்று இந்தியா வந்தடைந்தார். கடந்த ஜனவரியில் அப்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.
அற்புதங்களை நிகழ்த்தும் மனிதர் இந்திய ஆன்மீக குரு ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரோட்ரிக்ஸ் புட்டபர்த்திக்குச் சென்றார். பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னதியில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து நடந்த ஆரத்தியில் பங்கேற்ற வெனிசுலா அதிபர் மனமுருகி பகவானை பிரார்த்தனை செய்தார். வெனிசுலாவில் சத்ய சாய் பாபாவின் பக்தர்கள் கொண்ட ஒரு வலுவான சமூகம் வியக்கத்தக்க வகையில் இருப்பது குறிபிடத்தக்கது.