பூஞ்சோலை சென்ற முத்தாலம்மன்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்



நத்தம்: நத்தம் அருகே அய்யாபட்டி ,கோட்டையூர் கிராமங்களில் முத்தாலம்மன் கோயில் திருவிழாக்கள் நடந்தது. கிராமங்களில் முதல்நாள் இரவு வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மந்தைக்கு வந்த அம்மன்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜை , அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அய்யாபட்டி, கோட்டையூர் கிராமங்களில் தீவட்டி பரிவாரங்களுடன் முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்