கொட்டியூர் சிவன் கோவிலில் வைசாக மகோத்சவம்: குவியும் பக்தர்கள்



பாலக்காடு: கொட்டியூர் சிவன் கோவில் வைசாக மகோத்சவத்தை முன்னிட்டு 14ம் தேதி ரோகிணி வழிபாடு நடக்கிறது.


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கொட்டியூர் சிவன் கோவில். பாவலி நதிக்கரையில் அமைந்துள்ள தீக்ஷனா காசி என்று அறியப்படும் இக்கோவில் ஆண்டில் ஒரு முறை மட்டுமே திறந்து திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வைசாக மகோத்சவம் என்ற அழைக்கப்படும் திருவிழா மே 2ம் தேதி தொடங்கியது. ஜூன் 24ம் தேதி நிறைவு பெறும் இந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவரை தரிசித்து வழிபட்டு செல்கின்றனர். உற்சவத்தை முன்னிட்டுள்ள இறுதியானதும் மிக சிறப்பானதுமான சடங்கான ரோகிணி வழிபாடு 14ம் தேதி நடக்கிறது. தக்ஷ யாக பூமியில் சதி தேவி உயிர்நீத்தபோது, துக்கமடைந்த சிவபெருமானை சாந்தப்படுத்த விஷ்ணு பகவான் வந்து அவரைக் கட்டியணைத்ததாக ரோகிணி வழிபாடின் ஐதீகம். இத்திருநாளில் உற்சவமூர்த்திக்கு ஆலிங்கன புஷ்பாஞ்சலி, சீவேலி, பாலபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் 16ம் தேதி திருவாதிரை சதுச்சதம், 17ம் தேதி புனர்பூசம் சதுச்சதம், 19ம் தேதி ஆயில்யம் சதுச்சதம், 20ம் தேதி மகம் சதுச்சதம் ஆகிய வழிபாடுகள் நடக்கிறது. ஆச்சாரங்களின்படி 20ம் தேதிக்கு பிறகு பெண்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 24ம் தேதி திருக்கலசாட்டு என்ற வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்