திருப்பதி; முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் லிமிடெட், ரூ31,72,532 மதிப்புள்ள லாரி ஒன்றை இன்று சனிக்கிழமையன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது. இந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் குமார், ஸ்ரீவாரி கோயிலுக்கு முன்பாக அந்த வாகனத்திற்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து, அதன் சாவியை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துப் பிரிவுப் பொது மேலாளர் லட்சுமி பிரசன்னா மற்றும் கிருஷ்ணையா ஆகியோர் கலந்துகொண்டனர்.