விசூர் திரவுபதியம்மன் கோவிலில் 21ல் துரியோதனன் படுகளம்



உத்திரமேரூர்: விசூர் திரவுபதியம்மன் கோ விலில், அக்னி வசந்த உத்சவத்தின், 18வது நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி 21ம் தேதி காலையிலும், தீமிதி திரு விழா மாலையிலும் நடக்கிறது.

உத்திரமேரூர் அடுத்த, விசூர் கிராமத்தி ல் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உத்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.

இதில், மேல்நேத்தப்பாக்கம் ஆன்மிக சொற்பொழிவாளர் பார்த்திபன் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார்.

பெருங்கட்டூர் மாரி துரைசாமி மஹாபாரத இசை கருவி வாசித்து வருகிறார்.

உத்சவத்தின் 9ம் நா ளான கடந்த 12ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடந்து வருகிறது.

உத்சவத்தின் 18வது நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி 21ம் தேதி காலையிலும், தீமிதி திருவிழா மாலையிலும் நடக்கிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்