ஜனநாயகன் பட வெற்றிக்கு மண்டியிட்டு கோவிலை சுற்றி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்



கோவில்பாளையம்: முதல்வர் விஜய்யின் படம் வெற்றி பெற வேண்டி மாணவர் மண்டியிட்டு கோவிலை சுற்றி மண் சோறு சாப்பிட்டார்.


முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பல மாத இழுபறிக்கு பிறகு இன்று வெளியானது. வடுகபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஜனநாயகன் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வேண்டி பிரசித்தி பெற்ற கரட்டுமேடு முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டார். முன்னதாக கோவில் வளாகத்தை மண்டியிட்டு சுற்றி வந்து வழிபட்டார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்