செஞ்சி: செஞ்சி பி ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி பி ஏரிக்கரை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூட நெல், அரிசி. மணிலா வியாபாரிகள் சங்கம், எடை பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 54வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா வரும் 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 7 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், 8.00 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து மகா கணபதி மற்றும் நவகிரக ஹோமமும், 9 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேமும், பிரவேசபலியும், 10 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. சாமி கோவில் உலாவும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இதில் அறங்காவலர் சிவக்குமார், கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், எடை பணியாளர் சங்க நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி கிருத்திகை தினமான 7ம் தேதி காலை 7 மணிக்கு எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் 9.30 மணிக்கு அக்னி சட்டி மற்றும் 108 கிலோ எடை உள்ள சக்திவேல் ஊர்வலமும், தொடர்ந்து 12 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகமும், செடல் சுற்றுதல், மழுவேந்தல், தீமிதியும், மாலை 3 மணிக்கு அலகு குத்தி தேர் இழுத்தலும், 8 ம் தேதி இடும்பன் பூஜையும் நடைபெற உள்ளது.