காரைக்குடி காட்டம்மன் கோயிலில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமம்



காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர் பட்டினம் காட்டம்மன் கோயிலில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 26 ம் ஆண்டு ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியானது கடந்த ஜூலை 27ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஜூலை 28ஆம் தேதி காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு அபிஷேகங்கள் ஹோமங்களை தொடர்ந்து பூர்ணஹீதி நடந்தது. அதனைத் தொடர்ந்து 108 கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லுப்பட்டி ஜோதிடர் சீதாராம சிவாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். இதில் காரைக்குடி தேவகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்