மழை வேண்டி சிறப்பு வழிபாடு



மயிலம்: மயிலம் அடுத்த தீவனுாரில் பழங்குடி மக்களின் குல தெய்வமான கன்னியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, தீவனுார் குளக்கரை அருகில் இருந்து பூங்கரகம் மற்றும் கன்னியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். தொடர்ந்து, மதியம் அபிஷேகம் மற்றும் மகா தீபாரானை நடந்தது.

இதையடுத்து சாகை வார்த்தலும், மாலையில், அம்மன் வீதியுலாம் நடைபெற்றது.

மாலையில், தீவனுார் நான்கு முனை சந்திப்பில், பாரம்பரிய இசையுடன் அம்மன் பக்தி பாடல்களை பழங்குடி மக்கள் பாடினர்கள். இரவில், கிராம பழங்குடி இன மக்கள் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை பழங்குடி மக்கள் விழாக்குழுவினர் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்