வேலப்பநாயக்கன்பாளையத்தில் சாட்டைவார் சுவாமிகளின் 48வது குரு பூஜை விழா



பகிர்க copied

சூலூர்: வேலப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த ஸ்ரீ சாட்டைவார் சுவாமிகளின் குரு பூஜை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


சுல்தான்பேட்டை அடுத்த வேலப்பநாயக்கன் பாளையத்தில், ஸ்ரீ சாட்டை வார் சுவாமிகளின், 48 வது குரு பூஜை விழா நடந்தது. சதாசிவம் தலைமையில் குருபூஜை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அன்னதான ஆதினம் சிவப்பிரகாச சுவாமிகள், சிவபுரம் அருள் ஜோதி தபோவனம் மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கி பேசினர். வாவிபாளையம் அருள்நந்தி முகவாண்மையை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், நல்லாசிரியர் பூங்கோதை ஆகியோர், குரு பூஜை வழிபாடுகள் குறித்தும், குருமார்கள் வழிகாட்டல்கள், போதனைகளின் பலன்கள் குறித்து விளக்கி பேசினர். ஆசிரியர் ரத்தினம், கார்மேகம், ராமநாதன், அசோக்குமார், மீரா, சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்