வடலூர் சத்திய ஞான சபையில் மாதாந்திர ஜோதி தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்



பகிர்க copied

வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.


வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை உள்ளது. இங்கு மாத பூசம் தினமான இன்று, வள்ளலார் பிறந்த தினமும் சேர்ந்தே வந்ததால், மாலை ஜோதி தரிசனம் காண ஏராளமானோர் திரண்டனர்.


இன்று காலை தருமச்சாலை மற்றும், சத்திய ஞான சபை என, இரண்டு இடங்களிலும் சன்மார்க்கக் கொடி உயர்த்தப்பட்ட நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை 7:45 மணிக்கு, சத்திய ஞான சபையில் ஆறு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி வழிபாடு 8:45 மணி வரை நடந்தது. இதில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, இந்திரா நகர், சேத்தியாத்தோப்பு, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்