சிறுமுகை: சிறுமுகை அருகே இரும்பொறை பகுதி, பட்டக்காரம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திம்மராயப்பெருமாள் கோவிலில், 45-ம் ஆண்டு புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயப்பெருமாள் சுவாமிக்கு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அமுது படைத்தல், சுவாமி அழைத்தல், நிகழ்வுகள் நடந்தன. காலை 10:31 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடந்தது. பின், பட்டக்காரம்பாளையம் பெண்கள் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜையும், விழாவின் நிறைவாக மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா மற்றும் நிர்வாக குழுவினர், அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.