திருத்தணி முருகன் மலைக்கோவிலில் அரை மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்



பகிர்க copied

திருத்தணி: வடகிழக்கு பருவ மழை காரணமாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால், வார விடுமுறை நாளான இன்று, திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் பொது வழியில் அரை மணி நேரத்தில் மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வழக்கமாக, ஒவ்வொரு விடுமுறை நாளிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டு, பொது வழியில் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் முதல், நான்கு மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசிப்பர். ஆனால், இன்று வடகிழக்கு பருவமழை காரணமாக், மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால், பொது வழியில் அரை மணி நேரத்திற்குள், பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், வெறும் 10 நிமிடத்தில் மூலவரை தரிசித்தனர். திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஹுபம் திமான் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மலைக்கோவிலுக்கு, இருசக்கர வாகனங்கள் தவிர, மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததால், கோவில் நிர்வாகம் சார்பில் ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக, இன்ற அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தங்க வேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்