ஐயப்ப சுவாமிக்கு ஐப்பசி மாத பூஜை



பகிர்க copied

வால்பாறை: வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலில் ஐப்பசி மாத பூஜை நடந்தது.

ஐப்பசி மாதம் முதல் நாளான நேற்று, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு, காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.

சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்