திருப்பதியில் தங்கத் திருச்சி உற்சவம்: ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி!



பகிர்க copied

திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை இரவு, தங்கத் திருச்சி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி, ஸ்ரீராமர் பட்டாபிஷேக அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நான்கு மாட வீதிகளில் ஊர்வலம்: தங்கத் திருச்சியில் எழுந்தருளிய உற்சவர் மூர்த்திகளான மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டனர். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் பெருமாளைத் தரிசித்து வழிபட்டனர். இந்த உற்சவத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்