சென்னையில் நவராத்திரி விழா நிறைவு: காசிமேடு கடற்கரையில் துர்கா சிலைகள் கரைப்பு



பகிர்க copied

சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு கடற்கரையில் மற்றும் பிற முக்கிய கடற்கரை பகுதிகளில் பக்தர்களால் விம்சையாக கரைக்கப்பட்டன.


வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை போல், நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை நடத்தப்படும். அந்த வகையில் சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி, மாம்பலம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், துர்கா சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்ட நிலையில், விஜயதசமி நாளான நேற்று, ஒன்பது நாட்கள் வழிபாடு முடிந்த துர்கா சிலைகள், ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் வண்ணம் பூசிக் கொண்டு, உற்சாகமாக நடனமாடிச் சென்றனர். வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலையை சென்னை காசிமேடு கடற்கரையில்  கரைத்தனர். இதேபோல, மெரினா கடலிலும் துர்கா சிலைகள் கரைக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்