11ம் நுாற்றாண்டு நடுகல் சிற்பம் காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு



பகிர்க copied

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோவிலில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 49து வார்டு தும்பவனம் பகுதியில், வரலாற்று ஆய்வாளரும், சென்னை துாய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்துறை உதவி பேராசிரியருமான முனைவர் மு.அன்பழகன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தும்பவனத்தம்மன் கோவிலில், கி.பி.11ம் நுாற்றாண்டை சார்ந்த நடுகல் சிற்பத்தை கண்டறிந்தார்.

இதுகுறித்து அன்பழகன் கூறியதாவது:

நடுகல் என்பது போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். தும்பனத்தம்மன் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பத்தில் உள்ள, வீரனின் சிற்ப உருவம், 25.5 செ.மீ உயரம், 15 செ.மீ அகலம், 15 செ.மீ தடிமனுடன் உள்ளது. இந்நடுகல் சிற்பத்தின் காலம் கி.பி.11ம் நுாற்றாண்டாக இருக்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்களில் இதுவே மிகவும் சிறிய நடுகல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் உமாசங்கர், தும்பவனத்தம்மன் கோவில் குழு தலைவர் விமல்தாஸ், றுப்பினர்கள் விஜயலட்சுமி, சமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்