சாலவாக்கம்: சித்தனக்காவூர் துர்கையம்மன் கோவிலில், 13ம் ஆண்டு தீமிதி விழா மற்றும் பால்குட ஊர்வலம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. சாலவாக்கம் அடுத்த சித்தனக்காவூர் கிராமத்தில், துர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் ஊரணி பொங்கல் வைத்தல் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பகல் 1:45 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது.